Description
ராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது எட்டிவயல் கிராமம். கிராமத்தை சுற்றி கருவேலம் மரங்கள் சூழ்ந்திருக்க அதன் நடுவே 60 ஏக்கர் பரப்பளவில் பசுமை தீவு போல காட்சி தருகிறது தரணி முருகேசனின் இயற்கை விவசாயப் பண்ணை. மூன்றடி உயரத்தில் தகதகவென்று ‘மைசூர் மல்லி’ நெற்பயிர் வளர்ந்து நிற்கிறது.
கர்நாடக மாநிலத்தில் பாரம்பரிய நெல் வகையான மைசூர் மல்லி மிகுந்த மருத்துவ குணம் கொண்டவையாக இருந்தால் அரச குடும்பத்தினர்களுக்காக பயிரிடப்பட்ட நெல் வகை என்று பெயர் பெற்றது. இந்த நெல்லுல உற்பத்தி பண்ற அரிசி சாதம் தும்பைப் பூ போல் வெண்மையாக இருக்கும். சாதத்தின் கஞ்சி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், நீராகாரமும் நல்ல சுவையுடனும் இருக்கும்.
குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாவதால் மைசூர் மல்லி குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்ற ரகம். நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு உணவளிக்க பெரும்பாலான பெற்றோர்கள் இந்த மைசூர் மல்லி அரிசியை விரும்பி வாங்குகிறார்கள்.
இந்த ஆண்டு பன்னிரண்டு ஏக்கரில் மைசூர் மல்லி நெல்லை பயிரிட்டுள்ளேன். பூச்சிக்கொல்லியையோ, ரசாயன உரத்தையோ பயன்படுத்தாமல் முற்றிலும் இயற்கை முறையில சாகுபடி செயதால் பூச்சித் தாக்குல் முற்றிலும் இல்லை. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த முறை பெய்த கனமழைக்கு பக்கத்து வயல்களில் உள்ள நெல் எல்லாம் துவண்டு போயிருக்கு. ஆனா, இந்த ரகம் கனமழையையும் தாங்கி அசராம நிக்குது.
வறட்சி பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வறட்சியை தாங்கி ‘மைசூர் மல்லி’ நன்கு வளரக்கூடியது. மைசூர் மல்லி 90 நாளில் பயிரிடலாம். 60-ம் நாளில் கதிர் பிடிக்கத் துவங்கும். 75-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் துவங்கும். 80-ம் நாள் தண்ணீர் கட்டுவதை நிறுத்தி பின்னர் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 48 மூட்டை வரையிலும் நெல் கிடைக்கும்.
Reviews
There are no reviews yet.